காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கொதிக்க வைத்து தேய்க்க முடி கருமையாகும் உதிர்வது நிற்கும்.
வாழைத்தண்டுச் சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
எருக்கன் செடியின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணல் காட்டி கட்டிகள் மீது கட்ட பழுத்து உடையும்.
மருதாணி இடுவதற்கு முன் கைகளை எலுமிச்சைச் சாறு கொண்டு நன்கு கழுவி காயவிட்டு மருதாணி இட்டால் நன்கு சிவக்கும்.
பப்பாளி பழம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
இலந்தை இலையை நன்கு அரைத்து காயத்தின் மீது போட்டுவர வெட்டுக்காயம் குணமாகும்.
இளநரை மறைய நெல்லிக்காய் அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.
வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமாகும்.
குங்குமப்பூவை, தாய்ப்பால் குழைத்து கண் மீது பற்று இட கண் நோய் குணமாகும்.
மாதவிடாய் காலங்களில் கோதுமை கஞ்சி சாப்பிட்டு வர உடற்சோர்வு நீங்கி பலம் பெறும்.
மாதுளம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர ஞாபகசக்தி அதிகரிக்கும் எலும்பு மற்றும் பற்கள் உறுதிபடும்.
தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.
கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெய்யுடன் கலந்து உதட்டு வெடிப்புக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
மண் பத்து போட்டு ஒன்றரை மணி நேரம் இளம் வெயிலில் இருந்து குளித்தால் தோல்வியாதிகள் குணமாகும்.