உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடை அதிகரிக்க தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் 5 யோகாசனம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தடாசனம்
மலை போல் நிற்கும் ஆசனமான தடாசனம் கைகளை உடலுடன் ஒட்டி வைத்து, கால்களை ஒன்றாகச் சேர்த்து வைத்து நேராக நிற்க வேண்டும். பின்னர் மூச்சை உள்ளிழுத்து தலைக்கு மேலே கைகளை உயர்த்திக் கைகூப்ப வேண்டும்.
வீரபத்ராசனம்
வீரபத்ராசனம் செய்வதற்கு முதலில் நேராக நின்று பின்னர் ஒரு காலை பின்னால் தூக்கிவிட்டு முன்னங்காலை 90 டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். பின்னர் தூக்கிய காலை நேராக நீட்டி கைகளைத் தோள்களுக்கு நேராக நீட்ட வேண்டும்.
உத்தித திரிகோணாசனம்
உத்தித திரிகோணாசனத்தை செய்வதற்கு முதலில் இரண்டு கால்களுக்கும் சற்று இடைவெளி விட்டு நேராக நிற்க வேண்டும். பின்னர் வலது கால் பாதத்தை நேராக 90 டிகிரி திருப்ப வேண்டும். கைகளைத் தோளுக்கு இணையாக நீட்டி வலது பக்கமாகச் சாய்ந்து உள்ளங்கையை வலது காலுக்கு அருகே தரையில் வைக்க வேண்டும்.
அதோ முக ஸ்வனாசனா
அதோ முக ஸ்வனாசனா ஆகும் செய்வதற்கு முதலில் நேராக நின்று கால் முட்டி வளையாமல் முன்பக்கம் குனிந்து தரையைத் தொட வேண்டும். இரண்டு கைகளும் காதுகளை ஒட்டியபடி, உள்ளங்கை தரையில் பட வேண்டும்.
தண்டாசனம்
தண்டாசனம் செய்வதற்கு முதலில் கால்களை நேராக நீட்டி அமர வேண்டும். இரண்டு கால்களில் அடிப்பகுதியும் தரையுடன் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் உடலுடன் ஒட்டியபடி உள்ளங்கை தரையில் படும்படி வைத்து, முதுகெலும்பு நேராக இருக்கும் படி வைத்து மார்பை நன்கு விரித்து வைக்க வேண்டும்.