சாப்பிடும்பொழுது அடிக்கடி வாயில் முடி சிக்குபடுகிறதா? இது ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடந்தால் பித்ரு தோஷத்துக்கான காரணமாக இருக்கலாம்.
அதாவது இவ்வாறு அடிக்கடி நடந்தால் முன்னோர்களை திருப்திப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முடி என்பது ஒருவரின் உயிர் சக்தியுடன் தொடர்புபட்டது. உணவில் அடிக்கடி முடி சிக்குபடுவது உங்கள் உயிர் சக்திக்கு ஆபத்தாக மாறலாம்.
அதுமட்டுமின்றி இது எதிர்மறை ஆற்றலையும் குறிக்கிறது.
உணவுகளில் முடி இருந்தால் உறவு நீடிக்கும் எனக் கூறுவார்கள். இது உணவு அருந்துபவர்கள் முகம் சுளிக்கக்கூடாது என்பதற்காக கூறப்படுவது.
தலை முடி என்பது சனியைக் குறிக்கும்.
வீட்டின் தரையில் ஒரு முடி விழுந்திருந்தால் கூட நல்லதல்ல எனக் கூறுவார்கள். இதனால்தான் பலர் வீட்டுக்கு வெளியிலும் பால்கனியிலும் தலை சீவுசார்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் தலைமுடி வெளியே விழுந்து விடுவதால் சனி பகவாால் நமக்கும் நமது குடும்பத்துக்கும் எதுவித பாதிப்பும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
எனவே அடிக்கடி உணவில் முடி சிக்குண்டால் அதற்கான காரணத்தையும் அதற்குரிய பரிகாரத்தையும் செய்வது நல்லது.