எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதென விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள ஒரு வீதம் இரும்பு மற்றும் போலிக் அமிலம் சேர்க்கப்பட்ட அரிசி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஐந்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை தடுக்க இந்த அரிசி வழங்கப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஒரு மாணவருக்கு மதிய உணவுக்காக 75 கிராம் அரிசியும் 500,000 பாடசாலை மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 04 மெற்றிக்தொன் அரிசியும் வழங்கப்படவுள்ளது.
உலக உணவு அமைப்பின் அனுசரணையில் விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றமை குற்ப்பிடத்தக்கது.