July 14, 2025
உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

Jan 23, 2024

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத்  தெரிவித்து சமூக ஆர்வலர்களால் இன்றைய தினம் பாராளும்ன்ற பகுதியில்  ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு சபையில் எடுத்துக்கொள்ள வேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது மக்களின் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதாக தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை சபையில் இன்று இரண்டாம் வாசிப்புக்கு  எடுத்துக் கொள்வதா அல்லது ஒத்திவைப்பதா என்பது தொடர்பான வாக்கெடுப்பு 33 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 83  வாக்குகளும்,எதிராக 50  வாக்குகளும் அளிக்கப்பட்டதைத்தொடர்து சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பித்திருந்தமையோடு

பலரது எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் மத்தியில் இன்றும் (23) நாளையும் 24) நாடாளுமன்றத்தில் இது தொடர்பான  விவாதம்  எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *