கல்வியாண்டு 2023 / 2024 இற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் ஜூன் 19 ஆம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.