December 17, 2025
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு விசேட திட்டம்..!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு விசேட திட்டம்..!

Jun 8, 2024

2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உயர்கல்வி கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்காக இக்கடன் தொகை வழங்கப்படுகின்றது.

இதன்படி, இக்கடன் தொகை பதினைந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கடன் தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இலங்கை வங்கி மேற்கொண்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாத்திரமே இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *