January 23, 2026
உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு – விசாரணை CIDக்கு ஒப்படைப்பு!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

உயர்தர பொருளியல் பரீட்சை வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு – விசாரணை CIDக்கு ஒப்படைப்பு!

Nov 25, 2025

தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளது என சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

அவர் மேலும், கிடைத்திருந்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் CID விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில், பரீட்சைக்கு முன்பே ஊகத்திற்குரிய வடிவில் வினாக்கள் பரவியதால், உண்மையில் வினாத்தாள் கசிந்துவிட்டதாக பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சில ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஊடகங்களுக்கு தங்களுடைய கவலைகளையும் கருத்துகளையும் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *