உயர்ந்த நிலையை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை..!!

0
3

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

இன்றைய (11) வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18,541.26 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 379.77 அலகுகளாக பாரியளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் S&P SL20 விலைச் சூட்டென் 143.70 புள்ளிகள் அதிகரித்து, 5502.34 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 10.22 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here