அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென, எம்.பி வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த ஊழியர்களில் பெண்களின் பங்களிப்பு வரையறுத்ததாகவே காணப்படுகிறது. அரச துறையில் 05 இலட்சத்து 95 ஆயிரத்து 143 பெண்கள் பணிபுரிகிறார்கள்.
தனியார் துறையில் 10 இலட்சத்து 74 ஆயிரத்து 607 பெண்களும், சுய தொழில்துறையில் 07 இலட்சத்து 03 ஆயிரத்து 290 பெண்களும் பணிபுரிகின்றனர். பெருந்தோட்டத்துறையில் 01 இலட்சத்து 70 ஆயிரத்து 786 பெண்கள் பணிபுரிகிறார்கள்.
அந்த வகையில் தொழில் துறைகளில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டுள்ளார். பாராளுமன்ற செயலாளர் நாயகமாக, பெண் ஒருவர் பதவி வகிப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அவர், ஏனைய அரச ஸ்தாபனபங்கள் இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 வீதம் பெண்கள் வாழ்கின்ற நிலையில், 12 பெண் பிரதிநிதிகள் மாத்திரமே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்வது கவலைக்குரியது என்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.