அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம், பரசன்கஸ்வெவ , பலுகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த ஹெட்டி ஆராச்சிலாகே சுனில் என்ற 65 வயதுடைய விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று, உயிரிழந்தவர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு மதியம் வீடு திரும்பியுள்ள நிலையில், பின்னர் தனது வீட்டில் உள்ள குளவி கூடு ஒன்றை உடைக்க முயன்ற போது குளவி கொட்டுக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.