கல்கிஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் இன்று (16) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பொருபன இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத இருவர் வந்து இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.