Tamil News Channel

உலகின் முதல் உயிருள்ள கணினி., ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள் சாதனை..!

மனித மூளையால் உருவாக்கப்பட்ட கணினியா? இது ஒரு கணினி புனைகதை போல தோன்றலாம், ஆனால் ஸ்வீடன் விஞ்ஞானிகள் இதை உண்மை என்று நிரூபித்துள்ளனர்.

மனித மூளை திசுக்களில் இருந்து உலகின் முதல் ‘வாழும் கணினி’யை தயாரித்து புதிய தொழில்நுட்ப புரட்சியை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

FinalSpark என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ‘Brainoware’ என்ற புதிய கணினியை  உருவாக்கியுள்ளனர்.

இது மனித மூளையின் நியூரான்களையும்  கணனி வன்பொருளையும் இணைத்து உருவாக்கப்பட்டது.

எனவே, இரண்டு பெயர்களையும் இணைத்து Brainoware என்று பெயரிட்டுள்ளனர்.

முதலில், விஞ்ஞானிகள் மனித மூளை ஸ்டெம் செல்களை எடுத்து ஆய்வகத்தில் பயன்படுத்தி நியூரான் போன்ற பண்புகளைக் கொண்ட ஆர்கனாய்டுகளை உருவாக்கினர்.

சாதாரண கணினி சிப்பைப் போலவே இது சிக்னல்களை அனுப்பவும் பெறவும் முடியும். இருப்பினும், மனித மூளையில் உள்ள நியூரான்கள் சுமார் 80 ஆண்டுகள் வாழக்கூடியவை.

ஆனால், இவற்றில் உள்ள நியூரான்கள் 100 நாட்கள் மட்டுமே வாழ்ந்து இறந்து விடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இவற்றுக்குப் பதிலாக புதியவை மாற்றப்படும் என்றனர்.

தற்போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் செயலிகளை விட சுமார் 10 லட்சம் மடங்கு குறைவான மின்சாரத்தையே பயன்படுத்துகிறது என்பது இதன் சிறப்பு.

AI தரவு மையங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் பின்னணியில், அவற்றின் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மின் நுகர்வைக் குறைக்கும் வகையில் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று FinalSpark இன் இணை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஃப்ரெட் ஜோர்டான் தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts