அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தனது நீண்டகால தோழியான சோபி அல்லோச்சசுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளதாக நேற்றைய தினம்(17) தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டதத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்களின் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் கலந்து கொண்டார்.
மேலும், தொழில் கட்சியின் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து திருமண உடையில் ஒரு பூச்செண்டை வைத்திருக்கும் புகைபடத்தை பெனிவொங் வெளியிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் 2007 இல் தனது வாழ்க்கை துணையை சந்தித்துள்ளதுடன் இவர்களிற்கு 12 மற்றும் 8 வயதில் இரு பெண்பிள்ளைகள் உள்ளனர்.
எனினும் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றனர்.