
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை….
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நேற்று(05.06.2024) செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் மரம் நடுகை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், மதகுருமார்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பிரதேச சம்மேளன உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
