December 13, 2025
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது…!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது…!

Aug 18, 2024

கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலேகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடவெஹெர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கெலேகம, திகன்னேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடவெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *