நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்கள் தொடர்பாக பொதுத் தளத்தில் ஆராயப்பட்டு வருவதாக, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடான கலந்துரையாடலின் போது குறித்த விடயத்தினை தெரிவித்த செயலாளர் நாயகம்,
யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், தெளிவுபடுத்த வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தினால் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியதுடன், கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கணிசமானளவு மக்களின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புக்களையும் தீர்த்து வைத்த போதிலும், அவை அரசியல் மயப்படுத்தாமையே அண்மைய தேர்தல் பின்னடைவிற்கு காரணம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]