
ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான வின்சன் புளோரின்ஸ் ஜோசப் அவர்களின் 3ஆம் ஆண்டு!
ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான ஜோசப் ஐயா என அழைக்கப்படும் வின்சன் புளோரின்ஸ் ஜோசப் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில்நேற்றைய தினம் நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அவரது திருவுருவபடத்திற்கு துணைவியார் மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து ஈகைச் சுடரை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்கள்.