எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு விஜயம்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது அவர் பல அரசு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சஜித் பிரேமதாச இந்தியாவில் நடைபெறும் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன், சில முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார மையங்களையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சிறிது நேரத்திற்கு முன்பு நாட்டை விட்டு இந்தியாவுக்கு புறப்பட்டார் என விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
![]()