தொடரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கெக்கிராவ மடாட்டுகம ரேவத வித்தியாலயத்திற்கான பரீட்சை மத்திய நிலையத்தை கல்கிரியாகம மத்திய மகா வித்தியாலயத்தில் மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், முதல் முறையாக கொரிய மொழி மூலம் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கத்தக்கது.
பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு 346,976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இவர்களில் 281,445 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 65531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இம்முறை நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.