பொதுவாக உடலில் காணப்படும் அனைத்து உறுப்புகளும் சீராக செயற்பட வேண்டியது அவசியம். அப்போது தான் முழுமையான ஆரோக்கியத்தை பெறமுடியும்.
அந்தவகையில் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பிரதான தொழிலை சிறுநீரகம் நிறைவேற்றுகின்றது.
நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரகங்கள் சரியாக இயங்காத போது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
இவ்வாறு நிறுநீரகம் செயழிழக்க ஆரம்பிக்கும் போது உடலில் முன்கூட்டியே உடலில் சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.இவ்வாறான முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய அறிகுறிகள்
சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்படப்போகின்றது என்றால், சிலமாதங்களுக்கு முன்னரே சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஆரம்பிக்கும்.
குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது அதிகப்படியான அழுத்தம் அல்லது எரிச்சலை உணர்கின்றீர்கள் என்றால் அவதானமான இருக்க வேண்டும். அவை சிறுநீர பாதிப்பின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
சிறுநீரகங்கள் தான் உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகின்றன.
எனவே சிறுநீரகங்களின் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படும் போது இந்த நச்சுக்களை அப்படியே தேங்குவதால் முகம் மற்றும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுகின்றது.
சிறுநீர் கழிக்கும் போது நுரையுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதை பலரும் சாதாரனமாக எடுத்துக்கொள்வார்கள் ஆனால் அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாகவே இது பார்க்கப்படுகின்றது.
குருதியில் நச்சுக்கள் அதிகமாக தேங்கியிருந்தால், அதன் விளைவாக வாய் துர்நாற்றம் அல்லது வாயின் சுவையில் மாற்றம் ஏற்படக்கூடும் இதுவும் சிறுநீரக பாதிப்பின் பிரதிபலிப்பாகவே கருதப்படுகின்றது.
வழக்கத்துக்கு மாறாக உடல் சோர்வை அனுபவிக்கின்றீர்கள் என்றால் அல்லது அடிக்கடி களைப்பு ஏற்படுகின்றது என்றால் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததன் விளைவாகவே இவ்வாறான அறிகுறிகள் வெளிப்படும்.
சிறுநீரகங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது வெளியேற்றும் சிறுநீரின் நிறமும் சாதாரணமாக இருக்காது. ஒன்று சிறுநீர் அடர் நிறத்தில் இருக்கும் அல்லது வெளிரிய நிறத்தில் வெளியேறும் இது குறித்து நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.