எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் !
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (21) நாடாளுமன்றத்தில், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்ய மிரட்டியதாக கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று அவர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் புத்தளம் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, பைசல் கோபமடைந்து தன்னை கொல்ல மிரட்டியதாக கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து, கொலை மிரட்டல் ஒரு கடுமையான பிரச்சினை என்பதால் அர்ச்சுனாவுக்கு அதை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அப்போதைய சூழ்நிலை குறித்து பேச வேண்டுமென அர்ச்சுனாவிற்கு வாய்ப்பு அளித்தார்.
அதைதொடர்ந்து கருத்து தெரிவித்த எம்.பி.அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தனது கேள்விக்கு பதிலளிக்கையில், “புத்தளத்திற்கு வர வேண்டாம், நீ கொல்லப்படுவாய்” என கூறியுள்ளார்.
அர்ச்சுனா உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பவ இடத்தின் CCTV காட்சிகளை பயன்படுத்தி சம்பவத்தை உறுதிப்படுத்தலாம் என்றும் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
![]()