நேற்று(01.10.2024) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.
இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாவாகும்.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதன் புதிய விலை 319 ரூபாவாகும். அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தங்களுக்கு ஏற்ப லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கனிய வளக் கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்புக்கு நிகராக சினோபெக் நிறுவனம் ஒக்டென் 92 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளது.
அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 280 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.