February 11, 2026
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல்..!

Mar 26, 2024

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றவர்கள் மீது நேற்றைய தினம்(25) கார் ஒன்றில் வந்த நால்வர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மதுபோதையில் காரில் வந்த நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களை தடுக்க முயற்சித்த நபர் ஒருவர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்  இவ்வாறான குழுக்களின் செயற்பாட்டினை பொலிஸார் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *