தெற்கு அதிவேக வீதியில் 61 ஆம் மைல்கல் பகுதியில் இன்று அதிகாலை மத்தள பகுதியில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்த எரிபொருள் பௌசர் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு, கொழும்பு நோக்கிச் செல்லும் பாதை தடைப்பட்டுள்ளதுடன், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் மாற்று பாதையை பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.