அடுத்து மேற்கொள்ளப்படும் திருத்தத்தின் போது எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடளுமன்றில் நேற்று தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற வற் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்து வருவதாலும் நாட்டில் நிலவும் அதிகளவு மழை வீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளமையை கவனத்திற் கொண்டும் இவ்வாறு எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணக் குறைப்பை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் சபையில் நம்பிக்கை வெளியிட்டார்.