Tamil News Channel

எலான் மஸ்க்கின் அதிவேக இணைய சேவை – இலங்கையர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சித் தகவல்..!

எலான் மஸ்க்கின் (Elon Musk) ‘Starlink’ இணையம் இலங்கையர்களிடமிருந்து முன்கூட்டிய பதிவுகளை ஏற்றுக்கொள்ளும் பணியை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தத் திட்டம் குறித்து அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய Starlink வலையமைப்பை இலங்கையுடன் இணைப்பது தொடர்பாக எலோன் மஸ்க்குடன் நான் கலந்துரையாடியுள்ளேன். இந்த முயற்சியானது, குறிப்பாக கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளில், Wi-Fi இணைப்பு சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறியிருந்தார்.

2024 ஆம் ஆண்டு Starlink  இலங்கையில் சேவையை இலக்காகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு coverage பகுதியிலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்படும்.

பொதுமக்கள் முழுமையாகத் திரும்பப்பெறக்கூடிய 9 அமெரிக்க டொலர் வைப்பு செய்து Starlink சேவையை முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *