January 20, 2026
எலி எச்சத்தில் சிக்கிய வெதுப்பகம்…!
News News Line Top Updates புதிய செய்திகள்

எலி எச்சத்தில் சிக்கிய வெதுப்பகம்…!

Apr 3, 2024

புனித நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதை தடுக்கும் நோக்குடன் கல்முனை பிராந்தியத்தில் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் மற்றும் டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது தொடர்ந்தும்  திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

தொடர்ந்தும் நேற்று (02)   நான்காவது நாளாகவும் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை,சில்லறை கடைகள்,மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த மீன்கள் எரிபொருள் ஊற்றி அழிக்கப்பட்டதுடன் உணவகங்கள், வெதுப்பகங்களில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் எலி எச்சங்கள் காணப்பட்ட உணவு பண்டங்கள் கைப்பற்றப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலரும் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *