Tamil News Channel

எளிய முறையில் செய்யக்கூடிய மருத்துவ குறிப்புகள்..!

வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்தும் ஞாபக சக்தியையும் அதிகமாக்கும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பை தடுக்கலம்.

வெள்ளைப் பூசனிக்காயை துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ரோல், தலைசுற்றல் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்து சுளுக்கு உள்ள இடத்தின் மீது போட்டால் சுளுக்கு விட்டு விடும்.

அருகம்புல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நீரிழிவு குறையும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்  என்பன தீரும்.

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால்  தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம்  குறையும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts