இந்தியா உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று குளிர்சாதன இயந்திரம் (ஏசி) வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
‘லோட்டஸ் புளூபேர்ட் சொசைட்டி’-யில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் Air conditioner யூனிட் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பிளாட் முழுவதும் பரவி, அருகிலுள்ள குடியிருப்புகளிலும் பற்றியது.
மேலும், அந்த வளாகம் முழுவதும் கரும்புகை பரவியதால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களிடையே பீதி ஏற்பட்டது.
இதையடுத்து குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் கீழே இறங்கினர்.
இத்தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.
அந்த வீடியோ காட்சியில் மிக உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கரும் புகை வெளியேறும் காட்சிகள் பதிவாகி உள்ளன. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடுமையான வெப்ப அலை வீசுவதால், பொதுமக்கள் அதிக அளவில் ஏசி, ஏர்கூலர் போன்ற குளிரூட்டும் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏசி வெடித்து குடியிருப்பில் தீப்பிடித்த சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.