November 17, 2025
ஏடன் வளைகுடாவில் பற்றி எரிந்த கப்பல்
News News Line Top Updates புதிய செய்திகள்

ஏடன் வளைகுடாவில் பற்றி எரிந்த கப்பல்

Jan 28, 2024

ஹவுதி போராளிகள்  செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  நேற்று(27) ஏடன் வளைகுடா பகுதியில் பிரித்தானியாவை சேர்ந்த எண்ணெய்க் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டாவை தாக்கியுள்ளதோடு எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புக்கொண்டு உதவிக்கோரியுள்ளனர்.

இதனையடுத்து ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

எண்ணெய்க் கப்பலில் 22 இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 23 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *