Tamil News Channel

ஏ.ஆர் ரகுமான்- சாய்ரா விவாகரத்து- சோகத்தில் மகன் அமீன் ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள்..!

சுமாராக 29 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு ஏ.ஆர் ரகுமான் முற்றுபுள்ளி வைத்துள்ளதாக வெளியான செய்திக்கு மகன் வேண்டுகோள் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர் ரகுமான்- சாய்ரா

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களாக பணியாற்றி வரும் ஈமான், ஜிவி பிரகாஷ் ஆகியோர் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த செய்தி ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்படியொரு சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏ.ஆர் ரகுமான் அவருடைய காதல் மனைவி சாய்ராவை பிரியப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இவர், தென்னிந்திய சினிமாவில், மூத்த இசையமைப்பாளராக, மிகச்சிறந்த மனிதனாக திகழ்ந்து வந்தார். பல மேடைகளில் இவர் மனைவி மீதுள்ள காதலை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தயிருந்தார்.

கலக்கத்துடன் மகன் வெளியிட்ட பதிவு

இந்நிலையில், நேற்றைய தினம் ரகுமானின் மனைவி சாய்ரா பேகம் தன்னுடைய கணவர் ரகுமானை மிகுந்த மன வருத்தத்தோடு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இது குறித்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த சில மாதங்களாகவே ரகுமான் மற்றும் சாய்ரா இடையே உணர்ச்சி பூர்வமான பல விஷயங்கள் நடந்து வந்ததாகவும். இந்த சூழலில் சாய்ரா கடுமையான ஒரு முடிவை எடுக்க நேரிட்டிருக்கிறது என்றும் ரகுமானை பிரிந்து அவர் வாழ உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியொரு சமயத்தில், தாய் தந்தையின் பிரிவை குறித்து வெளியாக தகவலுக்கு மகன் அமீன் ஒரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, தாய், தந்தை விவாகரத்து முடிவு எங்களுக்கு மிகப்பெரிய மனக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் தேவையான அந்த தனிமைப்பட்ட நேரத்தை கொடுக்குமாறு தாழ்மையுடன் ஒரு கோரிக்கையை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts