யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹன்னன் சுலைமான் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, நாட்டின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் போசாக்கின்மை, கல்வி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.