கொழும்பு நீதிமன்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இன்று(19) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகிறது.
அத்துடன் குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.