ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 226ஆவது கட்டமாக 11 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,யாழ் வைத்தீஸ்வரா கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் ,யாழ்ப்பாண தொகுதி அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயேந்திரன்,நல்லூர் தொகுதி அமைப்பாளர் அ .கிருபாகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.