ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் மொனராகலை மாவட்ட வேட்பாளர் கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதற்காக ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, இனந்தெரியாத நபர் ஒருவர் ஜீப்பின் சாரதியின் முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசி, குறித்த வேட்பாளரை தடியால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான வேட்பாளர் மற்றும் சாரதி மொனராகலை கிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி இந்திக்க விஜய பண்டார அத்தநாயக்க என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வேட்பாளரை தடியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.