பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி பாடசாலைகளில் தரம் 12 மற்றும் 13 இல் கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள், கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மாணவர்கள், பசறை பகுதியில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here