இலங்கையின் ஐந்து விளையாட்டு சம்மேளனங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையை விளையாட்டுத்துறை அமைச்சு நேற்று (27) விதித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கை கபடி சம்மேளனம், இலங்கை வில் வித்தை சங்கம், இலங்கை மல்யுத்த சம்மேளனம், இலங்கை பிரிட்ஜ் சம்மேளனம் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் ஆகியவற்றுக்கே இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடைக்கால தடை விதிக்கப்பட்ட இந்த விளையாட்டு சபைகளின் நிர்வாக, பிற செயல்பாடுகளைக் கையாள்வதற்கும் மற்றும் பொருத்தமான தேர்தல்களை நடத்துவதற்குமான தகுதி வாய்ந்த அதிகாரம் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர். ரியர் அட்மிரல் ஷெமல் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.