இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்கள் பல்வேறு பட்ட கருத்துக்களை தெரிவித்துவந்தாலும் ஆட்சியில் உள்ளவர்கள்தான் மாறப்போகின்றார்கள் ஆனால் அவர்களின் கொள்கை ஒன்றுதான் என தமிழ்மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் என்ற கிராமத்தில் இருந்து அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு அவர்களின் அனுமதியுடன் இலவச வாகனம் விட்டு எங்களை எங்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.
1983 ஆம் ஆண்டு இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் இன்றும் நீதிக்காக போராடி வருகின்றார்கள்.
இந்த நிலையில் இலங்கையின் 9 ஆவது ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் கொக்குத்தொடுவாயினை சேர்ந்த தங்கம்மா என்ற பெண் கருத்து தெரிவித்துள்ளார்.
எனது வயதிற்கு எத்தனையோ தேர்தலை கண்டுள்ளோம் பல ஐனாதிபதிகள் வந்தார்கள் எல்லாரும் ஐனாதிபதியாக வரமுன்னர் முன்கூட்டி ஆசைக்கதையினை பேசி மோசம் செய்யும் ஆட்கள்தான்.
தமிழன் ஒருவர் இலங்கையில் ஐனாதிபதியாகவருவார் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் உள்ளது ஆனால் நம்பிக்கை இல்லை அந்தளவிற்கு ஏமாற்றப்பட்ட ஆக்கள்தான் நாங்கள்.
ஒன்று மாத்திரம் சொல்கின்றேன் ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் பாத்திரம்தான் மாறுகின்றது பால் ஒன்றுதான்.
இதுதான் இலங்கையின் உண்மையான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








