உலகெங்கிலும் உள்ள மொபைல் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபோன் 17 சீரிஸ் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைவரின் எதிர்பார்ப்பும் இந்த சீரிஸின் விலை என்னவாக இருக்கும் என்பதில் உள்ளது.

மேலும், வரவிருக்கும் புதிய மாடல்களின் மிகவும் பிரபலமான அம்சமாக ஐபோன் 17 ப்ரோவின் விலை இருக்கும். புதிய ஐபோன் 17 சீரிஸின் விலை பற்றி அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும், விலையை பொறுத்தவரை ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து சில நல்ல செய்திகள் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் split pricing strategy-ஐ கடைபிடிக்கும் என்று ஒரு புதிய தொழில்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

இது தொடர்பான 9to5Mac அறிக்கையில் மேற்கோள்காட்டப்பட்ட ஜேபி மோர்கனின் அறிக்கை, லேட்டஸ்ட் ஆப்பிள் மொபைல்களின் விலைகள் உயரும் என்று கூறுகிறது. ஆனால், அனைத்து ஐபோன் 17 மாடல்களுக்கும் இது பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here