கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கூபா நகர் கிண்ணியா 03 ஐ சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண்ணை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த கைதுசெய்யப்பட்ட பெண்ணை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில், மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post Views: 2