ஐக்கிய தேசியக் கட்சியின் பல புதிய அமைப்பாளர் பதவிகள் கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டன.
சிறிகொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அநுராதபுரம் மாவட்டத்தின் கலாவெவ தேர்தல் தொகுதிக்கான ஐ.தே.க பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடன் அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.பி.ஏக்கநாயக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.