நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற வெளியேற்றல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையில் போட்டி நடைபெற்றது.
இதில் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதனை தொடர்ந்து அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்டவீரருமான தினேஷ் கார்த்திக்,தனது ஓய்வை அறிவித்திருந்தார்.
தனது விக்கெட் கீப்பிங் கையுறைகளை கழற்றி உயர்த்தி காட்டி சீசன் முழுவதும் அவரது பங்களிப்புகளுக்காக அவருடன் இருந்த ரசிகர்களை பாராட்டினார்.ஓய்வை அறிவித்த அவருக்கு சக பெங்களூரு வீரர்கள் மரியாதை செய்தனர். விராட் கோலி கட்டியணைத்து பிரியாவிடை அளித்தார்.
17 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது புகழ்பெற்ற ஜபிஎல் வாழ்க்கையில் அவர் 2008 ஆம் ஆண்டு தொடக்க சீசனில் டெல்லிடேர்வில்ஸ்(தற்போது டெல்லி கேபிடல்ஸ்) உடன் அறிமுகமானார்.அவர் 2011 இல் பஞ்சாப் அணிக்கு மாறினார்.அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ்,குஜராத் லயன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இதுவரைக்கும் அவர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 257 போட்டிகளில் 4,842 ரன்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.