17 வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பத்து அணிகளும் தாம் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் (26) வெளியிட்டன.
இப்பட்டியலில் இலங்கை அணியின் இரு வீரர்கள் மாத்திரமே தங்கள் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய ஐ.பி.எல் அணிகளில் விளையாடிய இலங்கை வீரர்களை அந்த அணிகள் விடுவித்துள்ளன.
இதில் பெங்களூர் அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளராக செயற்படும் வனிந்து ஹசரங்கவை விடுவித்துள்ளது.
அதேபோன்று குஜராத் அணியில் இடம்பெற்ற இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்கவையும் பஞ்சாப் அணியில் விளையாடிய பானுக்க ராஜபக்ஷவையும் அந்த அணிகள் விடுவித்துள்ளன.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஆடும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஆகியோரை அந்த அணி தக்கவைத்துள்ளது.
இதன்படி அடுத்த ஐ.பி.எல் தொடருக்காக பத்து அணிகளும் மொத்தம் 173 வீரர்களை தக்கவைத்திருப்பதோடு 85 வீரர்களை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.