ஐ.பி.எல் மெகா ஏலத்தில் தங்களை பதிவு செய்யாத வெளிநாட்டு கிரிகெட் வீரர்களுக்கு அடுத்த ஆண்டில் நடக்கும் மினி ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படுமென ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று அணியால் ஏலம் எடுக்கப்பட்ட பிறகு போட்டிகளில் விளையாட முடியாது என கூறும் வீரர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரிலும் ஏலத்திலும் பங்கேட்க தடை விதிக்கப்படுவர் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.