கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் நண்பர்களால் களவாடப்பட்ட ஒன்பது லட்சம் பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மகனுடன் நண்பர்கள் இருவர் வீட்டுக்கு வருகை தருவது வளமையான ஒன்றாகும் கடந்த 16 அன்று வீட்டில் வைப்பட்ட நகையை தேடிய போது நகை காணாமல் போயுள்ளதுடன்
மேலும் தேடியபோது நகையை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து கிளிநொச்சியில் களவாடப்பட்ட நகையுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நகையையும் மீட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் பல தரப்பட்ட குற்றமிழைத்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன்.
குறித்த களவு தொடர்பாக கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
Post Views: 3