இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பாக ஜனித் லியனகே (janith Liyanage) 101 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் தஸ்கின் அஹ்மட் (Taskin Ahmed) 3 விக்கட்டுக்களையும், மெஹிதி ஹசன் மிராஷ் (Mehidy Hasan Miraz) 2 விக்கட்டுக்களையும் பங்களாதேஷ் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 40.2 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றியடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தன்சித் ஹசன் (Tanzid Hasan) 84 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
இலங்கை அணிக்கு லஹிரு குமார (Lahiru Kumara) 4 விக்கட்டுக்களயும், வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) 2 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் வீரர் ரிஸாத் ஹொசைன் (Rishad Hossain) தெரிவாகியிருந்தார்.
இத்தொடரின் நாயகனாக பங்களாதேஷ் வீரர் நஜ்முல் ஹொசைன் சண்டோ (Najmul Hossain Santo) தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியுடன் பங்களாதேஷ் அணி இத்தொடரை 2-1 கணக்கில் கைப்பற்றியுள்ளது.