தற்போது சந்தையில் அறிமுகமாகவும் கைக்கடிகாரங்கள் நேரம் பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் இன்னும் பல வசதிகளுடன் வெளிவருகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் Bip 5 Unity என்ற ஸ்மார்ட் வொட்ச்சை அறிமுகப்படுத்தியுள்ளது Amazfit நிறுவனம்.
இந்த கைக்கடிகாரமானது, 1.91 இன்ச் அளவு டிஸ்ப்ளே, 70க்கும் அதிகமான டவுன்லோடபிள் செயலிகளுக்கான சப்போர்ட், இதயத்துடிப்பை கணக்கிடும் செயலி போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.
இதில் பெண்களுக்கு பிடித்த பிங்க் நிறமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கைக்கடிகாரத்தை ஒரு தடவை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரையில் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.