இன்று உலக அளவில் உள்ள மக்கள் மொபைல் போனில் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருக்கின்றது. தொழில் ரீதியாகவும், சொந்தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறு மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பை, அதன் நிறுவனம் பயனர்களுக்கு உதவியாக பல மாற்றங்களை செய்து வருகின்றது.
அந்த வகையில், நமது வாட்ஸ் அப் கணக்கினை பல சாதானங்களில் இணைத்து ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படும் அம்சத்தைக் கொடுத்துள்ளது.
முன்னதாக பயனர்கள் பல்வேறு போன்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கு தனித்தனி போன் நம்பர்களை கொடுக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் இந்த 2024 அப்டேட்டுக்கு பிறகு ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்டை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் அதிலும் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் உட்பட பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை வாட்ஸ்அப் கம்பானியன் மோடு (Companion mode) என்று அழைக்கிறது. இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு பயனர்கள் தங்களுடைய பிரைமரி போனை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்திருப்பது அவசியம்.
Companion Mode அமைப்பது எப்படி?
கணினியில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதற்கு முதலில் உங்களுடைய பிரைமரி போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து கொள்ளுங்கள். உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் டிஸ்ப்ளே செய்யப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்தால் கணினியில் உங்களது வாட்ஸ் அபக் கணக்கு Open ஆகிவிடும்.
இதுவே மற்றொரு போனில் இணைக்கவேண்டும் என்றால், வாட்ஸ்அப் அப்ளிகேஷனை உங்களுடைய செகண்டரி போனில் இன்ஸ்டால் செய்து, Privacy பாலிசியை ஒப்புக்கொண்டு, அப்ளிகேஷனின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
இந்த போனை Companion Mode டிவைஸாக இணைப்பதற்கான ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். உங்களுடைய பிரைமரி போனில் இருந்து QR கோடை ஸ்கேன் செய்யும் படி கேட்கப்படுவீர்கள்.
இந்த படிகளை நீங்கள் நிறைவு செய்த பிறகு உங்களுடைய எல்லா சாட்டுகளும் பிரைமரி போனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களிலும் காண்பிக்கப்படும்.
நீங்கள் 14 நாட்களுக்கு மேல், பிரைமரி சாதனத்தில் உள்ள வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தாவிட்டால், அது தானாகவே Log Out செய்யப்பட்டு விடும்.