பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், அடர்ந்த நீளமான கூந்தலுக்கு உதவும் எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 கப்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- வெந்தயம்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதில் கழுவி காயவைத்து வைத்த கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் அரைத்த வைத்த விழுதை சேர்த்து காய்ச்சவும்.
எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து நுரை அடங்கும் வரை கொதிக்கவிடவும்.
பின்னர் இதனை நன்கு ஆறவைத்து எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
இந்த எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர ஒரே மாதத்தில் தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.